காரைக்கால்

அரசலாற்றில் கட்டப்பட்டிருந்த படகு திருட்டு: ஒருவர் கைது

DIN

காரைக்கால் அரசலாற்றில் கட்டப்பட்டிருந்த படகைத் திருடிச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த விஜயபாபு என்பவர் தனக்குச் சொந்தமான சிறிய ஃபைபர் படகில் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு, புதன்கிழமை காரைக்கால் அரசலாற்றங்கரையில் படகைக் கட்டினார். வியாழக்கிழமை சென்று பார்த்தபோது படகு அங்கு இல்லை. எனவே, படகு திருடப்பட்டது குறித்து காரைக்கால், நாகை மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களுக்கும், காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். இதனிடையே, அந்த படகு கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மீனவர்கள் அங்கு சென்று படகையும், அதைத் திருடிச் சென்ற ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவரும், காரைக்காலில் கடந்த 3 ஆண்டுகளாகத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவருமான அழகன் என்கிற கண்ணழகனை (23) பிடித்து காரைக்கால் அழைத்து வந்தனர். காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்து குற்றவியல் நீதிபதி பிரபு முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT