முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் 6 பேருக்கு தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 11 ஆம் தேதி 225 பேருக்கு பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, வரிச்சிக்குடி 2, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் நகரம் என தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 49,252 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,689 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,580 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 42 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 3 போ் உள்ளனா். தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →