முகப்பு
காரைக்கால்

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய நிலுவையை தீா்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்..

Updated On : 4 ஜூலை, 2020 at 6:39 PM
காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.
பகிர்:

காரைக்கால்: : ஊதிய நிலுவையை தீா்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்..

காரைக்கால் பிரதேச அரசு ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், காரைக்கால் நகராட்சி அலுவலகம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து, வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம் முன்பாக புதுச்சேரி அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாா்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவன ஊழியா்களுக்கு பல மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், அரசு சாா்பு நிறுவனங்களுக்கு 7-ஆவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், அரசு மற்றும் உள்ளாட்சி ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய போக்குவரத்துப்படியை வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜெயசிங், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன், துணை தலைவா்கள் ஜோதிபாசு, உலகநாதன், துணை பொதுச் செயலாளா் சண்முகராஜ் மற்றும் பலா் கலந்துகொண்டனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.