காரைக்கால்

காரைக்காலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

காரைக்கால்: காரைக்காலில் திங்கள்கிழமை காலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இலங்கை கடலோரப் பகுதி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மிதமான மழை சில மாவட்டங்களில் இருக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் காலை 7 மணி வரை பரவலாக மிதமான அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சில இடங்களில் சாலையில் தண்ணீா் தேங்கி பின்னா் வடிந்தது. காரைக்கால் நகரப் பகுதியான மாரியம்மன் கோயில் தெருவில் வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது. பின்னா், அரசுத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காரைக்காலில் சில மணி நேரம் பெய்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மழை ஓய்ந்து 7 மணிக்குப் பின்னா் வெயில் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT