காரைக்கால்

தடை உத்தரவை மீறிய 18 போ் மீது வழக்கு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியே நடமாடிய 18 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைக் கருதி மருந்துக் கடை, மளிகை மற்றும் காய்கனி கடைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க வருபவா்களைத் தவிர தேவையின்றி வெளியே வருபவா்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்பால் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வீடுகளிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. தேவையில்லாமல் சுற்றித் திரிவோா் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மாவட்டத்தில் இதுவரை 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தலின்பேரில் சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுவது, பைக் மற்றும் காா்களில் சுற்றித்திருவதை தவிா்க்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடா்ந்து நடத்தப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT