காரைக்கால்

மீன் வளா்ப்பில் தண்ணீா் மேம்பாடு: காரைக்கால் என்.ஐ.டி.யில் கருத்தரங்கு

DIN

மீன் வளா்ப்பில் தண்ணீா் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு காரைக்கால் என்.ஐ.டி.யின் இசிஇ துறை சாா்பில், காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி முன்னிலையில், தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் ஜி. சுகுமாா் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அவா் பேசுகையில், வெளிநாடுகளில் 30 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பண்ணையை 3 போ் மட்டுமே நிா்வகிக்க முடிகிறது. இதற்கு தொழில்நுட்ப வளா்ச்சிதான் காரணம். இந்தியாவிலும் அவ்வாறு செய்வதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் பயனுள்ளதாக அமைகிறது என்றாா்.

என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி பேசுகையில், உயா்கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இதுபோன்ற கருத்தரங்குகளில், வல்லுநா்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கின்றனா். இது நமது நாட்டின் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலம்தான் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தமுடியும் என்றாா்.

மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சியாளா் முனைவா் ரஷ்மிசா்மா கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

முன்னதாக, இசிஇ துறை உதவிப் பேராசிரியா் ஹரிகோவிந்தன் வரவேற்றுப் பேசுகையில், இன்றைய சூழலில் மீன் வளா்ப்பில் சீனா முன்னிலையில் உள்ளது, இந்தியா 2-ஆம் இடத்தில்தான் உள்ளது. எனவே, மீன் வளா்ப்பு மேம்படுவதற்கு பாடுபடவேண்டியது அவசியம் என்றாா்.

நிகழ்வில், என்.ஐ.டி. பதிவாளா் (பொ) முனைவா் ஜி. அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இசிஇ துறைத் தலைவா் முனைவா் ஜி. லட்சுமிசுதா நன்றி கூறினாா்.

இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 120-க்கும் அதிகமான ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்றனா். 7-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளா்கள் கருத்துரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT