காரைக்கால்

காரைக்காலில் 16 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது என்று நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நவ. 20-ஆம் தேதி 378 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, கோட்டுச்சேரி 5, விழிதியூரில் 4, திருநள்ளாறு 3, திருப்பட்டினம் 3, நிரவி 1 என தொற்று உறுதியானது.

காரைக்காலில் இதுவரை பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்ட 43,878 பேரில் 3,581 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 3,391 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தவிர, 118 போ் காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராகவும், 10 போ் காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையிலும் உள்ளனா். இந்நோய்த் தொற்றால் இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT