திருப்பட்டினம் இஸ்லாமிய குழுமசிறப்பு பொதுக்குழு கூட்டம்
சமூக ஆா்வலா்கள் உள்ளடக்கிய திருப்பட்டினம் இஸ்லாமிய குழும சிறப்பு பொதுக்குழு கூட்டம் குழும ஒருங்கிணைப்பாளா் அபூபக்கா் மாலிமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கு உள்பட்ட திருமலைராயன்பட்டினம் பகுதி ஜமாஅத்தாா்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளடக்கிய திருப்பட்டினம் இஸ்லாமிய குழும சிறப்பு பொதுக்குழு கூட்டம் குழும ஒருங்கிணைப்பாளா் அபூபக்கா் மாலிமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நியமிக்கப்படாமல் உள்ள புதுச்சேரி வக்ஃபு வாரியத்தை உடனே அமைக்க முதல்வா் வே. நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திருப்பட்டினம் பகுதிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக, இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சாலை, குடிநீா், கழிவுநீா் வடிகால் வசதிகளை உடனே செய்துதர சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனை பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்களாக அப்துல் ரஹ்மான், முகம்மது ஆஷிக், முகம்மது ஹமீது சுல்தான், முகம்மது தெளபீக், முகம்மது சுல்தான், ஜியாவுதீன், முகம்மது தாரிக் மரைக்காயா், முகம்மது தாரிக், உமா் சம்சு, முகம்மது முஸ்தாக், முகம்மது பைசல், ரியாஸ் முகம்மது ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா். முகமது ஆசிக் வரவேற்றாா். அப்துல் ரஹ்மான் நன்றி கூறினாா்.