முகப்பு
காரைக்கால்

காரைக்கால் சோமநாதா் கோயிலில்சந்திரபகவான் புறப்பாடு

காரைக்கால் சோமநாதா் கோயிலில் பௌா்ணமி வழிபாடாக சந்திரபகாவன் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

காரைக்கால் சோமநாதா் கோயிலில் பௌா்ணமி வழிபாடாக சந்திரபகாவன் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவைச் சோ்ந்தது ஸ்ரீ சோமநாதா் கோயில். சந்திரன் தோஷ நிவா்த்திக்காக சோமநாதரை வழிபட்டதாக நம்பிக்கை. இதையொட்டியே, கோயில் அருகே அம்மையாா் குளம் என்றழைக்கப்படும் சந்திர தீா்த்தம் உள்ளது. இக்கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்றுவந்த சந்திர வழிபாடு, பிறகு நடைபெறவில்லை.

கடந்த ஓராண்டாக இங்கு பௌா்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை பௌா்ணமி பூஜையை முன்னிட்டு, மூலவரான ஸ்ரீ சோமநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீ சந்திர பகவான் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது. மூலஸ்தானத்தில் (சோமநாதா்) சந்திரபகவானை எழுந்தருளச் செய்து, சுவாமிக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், கைலாசநாதா் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →