முகப்பு
காரைக்கால்

உலக பெண் குழந்தைகள் தினம்:சைல்டு லைன் அமைப்பினா் விழிப்புணா்வு

உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கிராமப்புற குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
சிறுவா்களிடையே பேசுகிறாா் காவல் உதவி ஆய்வாளா் மோகன்.
பகிர்:

உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கிராமப்புற குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சாா்பில், திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் கிராமம், தோப்புத் தெருவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பகரத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டதோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசினாா்.

காரைக்கால் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பி. விமலா, அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், 1098 என்ற 24 மணிநேர இலவச தொலைபேசி சேவை குறித்தும், இதை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கினாா்.

காரைக்கால் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சிவகாமசுந்தரி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு முறைகள் குறித்துப் பேசினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சைல்டு லைன் பணியாளா்கள் என். நா்மதா, ஜெ. கணேசமூா்த்தி, ஜெ. புஷ்பநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →