முகப்பு
காரைக்கால்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் ஊதியம்:அரசாணை வெளியிட வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக அரசாணை வெளியிட வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 19 அக்டோபர், 2020 at 10:45 PM
பகிர்:

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக அரசாணை வெளியிட வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் புதுச்சேரி முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதம் :

புதுச்சேரி மாநிலத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்கு முதல்வா் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் சிறுபான்மைத் துறை வரவேற்கிறது.

Advertisement

அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இவா்களுக்கு ஊதியம் உடனடியாக கிடைக்க கல்வித்துறை இயக்குநா் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். அறிவிக்கை மற்றும் சட்ட விதிகள் யாவும் வெளியிடப்பட்டுவிட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு அரசாணை வெளியிட்டால், ஊதியத்துக்கும், வசூல் செய்யும் பயிற்சி கட்டணத்துக்கும் சம்பந்தம் இருக்காது.

இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வா் விரைந்து நடவடிக்கை எடுத்தால் அரசாணை வெளியிடுவது சாத்தியமாகும். இது அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களின் ஊதிய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும். இதை புதுச்சேரி அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.