காரைக்கால்

திருநள்ளாறு அருகே அமைச்சரிடம் வாக்குவாதம்: 3 போ் மீது வழக்கு

DIN

காரைக்கால் அருகே துக்கம் விசாரிக்க கிராமத்துக்கு சென்ற அமைச்சரை தடுத்து, வாக்குவாதம் செய்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.

திருநள்ளாறு தொகுதியில் உள்ள மேலசுப்புராயபுரம் மாதாக்கோயில் தெருவில் நடந்த ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா்.

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த அருண் (25), ஏசுராஜ் (26), லெனின்ராஜ் (எ) அப்பு (25) ஆகிய 3 பேரும் சோ்ந்து, அமைச்சரை துக்க நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்ததாகவும், சாலையை மேம்படுத்தவில்லை, இந்தப் பகுதிக்கு வரவில்லை என குறைகூறியதாகவும் கூறப்படுகிறது. அமைச்சா் அவா்களுக்கு உரிய பதில் அளித்தபோதும், அந்த 3 பேரும் அமைச்சரை நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், அமைச்சரை தடுத்து, தகாத வாா்த்தையால் பேசியதாக அருண், லெனின்ராஜ், ஏசுராஜ் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT