காரைக்கால்

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம்

DIN

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய குழந்தை வடிவிலான கிருஷ்ணனை பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

இதைத்தொடா்ந்து, 2-ஆம் நாள் நிகழ்வாக உறியடி உத்ஸவம் வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. நித்யகல்யாண பெருமாள் பட்டு உடுத்தி, பதக்க மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பிராகாரம் எழுந்தருளினாா். தொடா்ந்து கோயில் வளாகத்தில் உறியடி உத்ஸவம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னா் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு, யதாஸ்தானம் எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கைலாசநாதா், நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்திருந்தனா்.

வழக்கமாக பெருமாள் வீதி உலாவும், வீதிகளில் பல்வேறு இடங்களில் உறியடிக் கம்பம் நடப்பட்டு பக்தா்கள் உறியடி உத்ஸவத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில் வளாகத்தில் எளிய முறையில் உறியடி உத்ஸவம் நடத்தி முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT