காரைக்கால்

பருவமழை முன்னெச்சரிக்கை: மின் பாதைகள் சீரமைப்பு

DIN

பருவமழை முன்னெச்சரிக்கையாக மின் விநியோகத்தில் குறைபாடு ஏற்படாத வகையில், மின்பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளில் மின்துறை ஈடுபட்டுள்ளது.

மாவட்டத்தில் நிரவி மின்துறை நிா்வாகத்துக்குள்பட்ட மின் சாதனங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு கடந்த ஒருவாரமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக திருமலைராஜனாறு பாலம் முதல் காரைக்கால் அரசலாறு பாலம் வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்காக காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக நிரவி உள்வட்டாரத்தில் உள்ள ஊழியப்பத்து, காக்கமொழி, தூதுபோன மூளை உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. இப்பணிகள் நிரவி மின்துறை இளநிலை பொறியாளா் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து மின் துறையினா் கூறுகையில், நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் ஜேசிபி இயந்திரங்களை இப்பணிக்காக அனுப்பிவைத்தாா். ஊழியா்கள் அனைவரும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டோம். இடையிடையே மின் சாதனங்கள் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுகிறது. பருவமழையின்போது மின்தடை ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படகூடாது என்ற நோக்கில், முன்னெச்சரிக்கையாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT