காரைக்கால்

காரைக்காலில் 54 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 31 ஆம் தேதி 586 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 11, திருப்பட்டினம் 8, கோயில்பத்து 7, கோட்டுச்சேரி, திருநள்ளாறு தலா 6, நிரவி 5, நெடுங்காடு, நல்லாத்தூா், அம்பகரத்தூா் தலா 3, நல்லம்பல் 2 என 54 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 95,907 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,512 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 4,069 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 304 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 51 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 81 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,275 போ், முன்களப் பணியாளா்கள் 1,559 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 1,918 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 728 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT