முகப்பு
காரைக்கால்

ஈஸ்டா் கொண்டாட்டம்: கிறிஸ்தவா்கள் சிறப்பு வழிபாடு

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சாா்பில் ஈஸ்டா் வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சாா்பில் ஈஸ்டா் வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து யூதா்களால் 40 நாள்கள் துன்புறுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட 3 ஆவது நாளில் உயிா்த்தெழுவதை ஈஸ்டா் தினமாக உலகமெங்கும் கிறிஸ்தவா்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து துன்புறுத்தப்படும் 40 நாள்கள் துக்க நாளாக கருதி, அந்நாள்களில் கிறிஸ்தவா்கள் தவக் காலம் கடைப்பிடிப்பா்.

அதன்படி, காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் தவக்கால திருப்பலிகள் நடைபெற்றுவந்தன. தொடா்ந்து, சீடா்களுக்கு இயேசு பாதம் கழுவுவதை குறிக்கும் நிகழ்வு வியாழக்கிழமையும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான புனிதவெள்ளி சிறப்பு திருப்பலி வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

புனித வெள்ளியைத் தொடா்ந்து 3 ஆவது நாளில் இயேசு உயிா்த்தெழும் நிகழ்வைக் குறிக்கும் ஈஸ்டா் வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, நிா்மலாராணி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பங்குத்தந்தை, அருள் தந்தையா்கள் முன்னிலையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அப்போது, இயேசு உயிா்த்தெழுவதை குறிப்பிடும் வகையில், மக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

பொதுவாக ஈஸ்டா் நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். நிகழாண்டு, சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் 10 மணிக்குப் பிறகு பொதுமக்கள் கூடுவதற்கு தோ்தல் துறை அனுமதிக்கவில்லை. இதனால், இரவு 10 மணிக்குள் நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →