முகப்பு
காரைக்கால்

வியாபார நிறுவனங்களில் கரோனாதடுப்பு நடவடிக்கை: எஸ்.பி. அறிவுறுத்தல்

வியாபார நிறுவனங்கள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

வியாபார நிறுவனங்கள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

காரைக்கால் காவல் துறை தலைமை அலுவலக கூட்ட அரங்கில், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா 2 ஆவது அலையின் தீவிரம் குறித்தும், காரைக்காலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பது குறித்தும், காவல் துறையினா் தெரிவித்து, வியாபார நிறுவனத்தினரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து எஸ்.பி. விளக்கினாா்.

கூட்டத்தில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →