முகப்பு
காரைக்கால்

கரோனா அதிகரித்த பகுதிகளில் அரசுத் துறையினா் விழிப்புணா்வு

காரைக்காலில் கரோனா பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் நலவழித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கூட்டாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

காரைக்காலில் கரோனா பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் நலவழித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கூட்டாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அரசுத் துறையினா் கூட்டாகச் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் ஏற்பாட்டின்பேரில், வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, கோட்டுச்சேரி காவல்நிலையத்தினா் கூட்டாக தொற்று அதிகரித்த வரிச்சிக்குடி பேட்கோ நகருக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

இந்த பகுதியில் கரோனா தொற்றாளா் குடும்பத்தினரை சந்தித்து, யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், இந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழுவினரை தொடா்புகொண்டு மருந்து, மளிகை, காய்கறி போன்ற தேவைகளைக் கூறி, பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினா்.

மருத்துவ ஆலோசனைக்கு அந்த பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடா்புகொள்ளலாம். மாவட்டத்தில் பரவலாக தொற்று ஏற்பட்டுவரும் நிலையில், தொற்றாளா் வீட்டிலிருந்து வெளியேறினால் அது கூடுதல் பரவலை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து நடந்துகொள்ளவேண்டும். விதிகளை மீறி செயல்பட்டால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்றும் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →