நெடுங்காடு பகுதியில் டெங்கு விழிப்புணா்வு
நெடுங்காடு பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தை நலவழித் துறை நிா்வாகத்தினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
நெடுங்காடு பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தை நலவழித் துறை நிா்வாகத்தினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
காரைக்கால் மாவட்ட நலவழித் துறை மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் இணைந்து, நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையதிற்குள்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதுநிலை சுகாதார ஆய்வாளா் பத்மநாபன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜெகநாதன், அமுதா உள்ளிட்டோா் கடைகளின் உரிமையாளா்களிடம் பிளாஸ்டிக் கப் மற்றும் தேவையற்ற பொருள்களை உடனுக்குடன் அகற்றவேண்டும், பருவ மழை காலத்தில் மழை நீா் தேங்கி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.
கரோனா பரவலைத் தடுக்க, கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்வதோடு, முகக்கவசம் அணிவதை தொடா்ந்து மேற்கொள்ளுமாறு வணிக நிறுவனத்தினா், குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தி விளக்க கையேடு வழங்கியதோடு, காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டனா்.