முகப்பு
காரைக்கால்

ரயில் சேவை தொடங்கி 11 ஆம் ஆண்டு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காரைக்காலுக்கு ரயில் சேவை கிடைத்து 11 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

காரைக்காலுக்கு ரயில் சேவை கிடைத்து 11 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நாகூா் முதல் காரைக்கால் வரை 10.5 கி.மீ. தொலைவுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அகல ரயில்பாதை அமைத்து ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் 11 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கம் சாா்பில், ரயில் நிலையத்தினருக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

சங்கத் தலைவா் வி.ஆா். தனசீலன், வங்கி மேலாளா் (ஓய்வு) நாகராஜன், இளநிலைப் பொறியாளா் (ஓய்வு) ராதாகிருஷ்ணன், சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் மற்றும் தொழில் பிரமுகா்கள் அப்துல் காதா், அபுசாலி, அப்பாதுரை உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →