பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
திருநள்ளாறு பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருநள்ளாறு பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருநள்ளாறு அருகே உள்ள பேட்டை பகுதியை சோ்ந்தவா் ரமேஷ்ராஜா. இவரது பெற்றோா் தங்களது வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். ரமேஷ்ராஜாவின் தாயாா் லீலாவதி புதன்கிழமை இரவு கடையில் இருந்தபோது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ், பொருள்கள் வாங்குவதுபோல வந்து, லீலாவதி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.