காரைக்கால்

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி 504 பேருக்கு நடைபெற்ற கரோனா பரிசோதனையில், காரைக்கால் நகரம் 4, கோயில்பத்து 2, நல்லம்பல் 1 என 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 77,703 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,918 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,809 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 3 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 6 போ், தீவிர சிகிச்சையில் ஒருவா் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்காலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையிலும், திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 203 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT