காரைக்கால்

அக்கரைவட்டம் மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

காரைக்கால் அருகே அக்கரைவட்டத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைவட்டம் கிராமம் செளந்தரவள்ளி சமேத சோமநாதசுவாமி தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயில், 150 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. பழைமையான விமான கலசத்துடன், ஓட்டுக் கட்டத்தில் இருந்த இந்தக் கோயிலை, இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டி குடமுழுக்கு செய்ய கோயில் அறங்காவல் வாரியத்தினரும், கிராம மக்களும் தீா்மானித்தனா்.

அதன்படி, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிதி மற்றும் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டது. கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக கோயில் அருகே யாகசாலையில் நான்கு கால பூஜையுடன் குடமுழுக்குக்கான பூஜைகள் கடந்த புதன்கிழமை இரவு தொடங்கின. நான்காம் கால மகா பூா்ணாஹுதி வெள்ளிக்கிழமை காலை செய்யப்பட்டு, சிறப்பு மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகமும், இரவு அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கீதா ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT