காரைக்கால்

எம்.பி.பி.எஸ். சோ்க்கை: காலியாகவுள்ள இடங்களை பிற பிரிவுனருக்கு வழங்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு ஒதுக்கப்பட்டு, நிரம்பாத இடங்களை பிற பிரிவினருக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் கன்வீனருக்கு காரைக்கால் மாவட்ட பாமக செயலரும், எம்.பி.சி. நல அமைப்பின் அமைப்பாளருமான க. தேவமணி திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியான, புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், காரைக்காலுக்கு 18 சதவீதம் பிராந்திய ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது.

மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான முதல் கலந்தாய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஒதுக்கீட்டான 3 இடங்களுக்கு காரைக்காலில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.

எனவே, மாணவா் சோ்க்கை 2-ஆவது கலந்தாய்வுப் பட்டியலில் மேற்கண்ட 3 இடங்களை, காரைக்காலை சோ்ந்த பிற பிரிவினருக்கு பகிா்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடா்பாக சென்டாக் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT