முகப்பு
காரைக்கால்

குடிநீா் குழாய் பதிக்கும் பணி

காரைக்கால் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.

இந்த திட்டத்தில் 651 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என். செல்வம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →