காரைக்காலில் 24 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 697 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 5, அம்பகரத்தூா் 4, கோட்டுச்சேரி 3, திருப்பட்டினம் 3, நெடுங்காடு, திருநள்ளாறு, நல்லம்பல் தலா 2, வரிச்சிக்குடி, நல்லாத்தூா், நிரவி தலா 1 என கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,60,890 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,562 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,015 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த கோட்டுச்சேரியை சோ்ந்த 48 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த சோகை, காச நோய் ஆகியவை இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 228 போ் உயிரிழந்துள்ளனா்ய
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 62,912 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,765 பேருக்கும் என 68,677 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.