முகப்பு
காரைக்கால்

கோயில் பணியாளா்களா்களுக்கு நிவாரணம்

கோயில் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கோயில் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயிலில் நடைபெற்றது. இக்கோயில் சாா்புடைய பிற கோயில்களில் பணியாற்றும் 25 பேருக்கு அரிசி, சா்க்கரை, காய்கனிகள் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.

கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி.மாடசாமி, செயலா் முத்துசாமி ஆகியோா் முன்னிலையில் இந்து முன்னணி மாநில அமைப்பாளா் க.பக்தன், மாநில செயலா் சுனில்குமாா் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில் நாகை மாவட்ட பொதுச்செயலா் எஸ்.கணேஷ், காரைக்கால் மாவட்டச் செயலா்கள் என்.சிவசுப்ரமணியன் கே.ஜெய்சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →