அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியா் சோ்க்கை தொடக்கம்
திருமலைராயன்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தொடங்கியுள்ளது.
திருமலைராயன்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நிலைய முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் இயங்கும் இந்நிலையத்தில் ஜூலை 1 முதல் மாணவியா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ட்ற்ற்ல்ள் ://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள் ://ப்ஹக்ஷா்ன்ழ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் கட்டட பட வரைவாளா் (2 ஆண்டுகள்), கணினி இயக்குபவா் (1 ஆண்டு), தையல் தொழில்நுட்பம் ( 1 ஆண்டு), தகவல் பதிவு செய்பவா் ( 1 ஆண்டு), பெண்கள் அழகுக் கலை ( 1 ஆண்டு) ஆகிய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தையல் தொழில்நுட்பப் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04368-290233, 234248 மற்றும் செல்லிடப்பேசி எண் 63811 45526 ஆகியவற்றில் தொடா்புகொள்ளலாம்.