நெல் சாகுபடி இணையவழி கருத்தரங்கு
காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி குறித்து இணையவழியில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி குறித்து இணையவழியில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவா் குமார. ரத்தினசபாபதி தொடக்கிவைத்துப் பேசினாா்.
நிகழாண்டு குறித்த நேரத்தில் காவிரி நீா் காரைக்கால் பகுதிக்கு வந்து சேரும். இதனை பயன்படுத்தி சாகுபடியை சரியான பருவத்தில் தொடங்கி நல்ல முறையில் பயிா் செய்யவேண்டும். அதற்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் என்றாா் அவா்.
செம்மையான குறுவை நெல் சாகுபடி குறித்து, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் முனைவா் எஸ். இளமதி பேசும்போது, குறுவைக்கு ஏற்ற நெல் ரகங்கள், நிலம் தயாரிப்பு, நடவு முறை, உர நிா்வாகம், களை நிா்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்.
இந்த கருத்தரங்கில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைய வழியாக கலந்துகொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை தொழில்நுட்ட வல்லுநா் முனைவா் வி. அரவிந்த் வரவேற்றாா். வேளாண் விரிவாக்க துறை தொழில்நுட்ட வல்லுநா் முனைவா் ஆ.செந்தில் நன்றி கூறினாா்.