காரைக்கால்

2-ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தங்களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் தங்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், இதேபோல ஓய்வூதியதாரா்களின் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கூறி அரசின் கவனத்தை ஈா்க்க திங்கள்கிழமை தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

போராட்டத்தின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் காலை ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து, உள்ளாட்சி அமைப்புகளில் கையிருப்பில் இருக்கும் சொந்த நிதியான மேம்பாட்டு நிதியிலிருந்து இடைக்கால நிவாரணமாக நிதியை எடுத்து, நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கவேண்டும். இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் காரைக்கால் ஆட்சியருக்கு அறிவுறுத்தவேண்டும் என வலியுறுத்தினா்.

அந்தந்த அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் சங்கங்களின் பொறுப்பாளா்கள் தலைமை வகித்தனா். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கத்தினா், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொறுப்பாளா்கள் ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT