திருநள்ளாறு கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை
திருநள்ளாறு கோயில் யானையின் சளி மாதிரி கரோனா பரிசோதனைக்காக மத்திய பிரதேச ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
திருநள்ளாறு கோயில் யானையின் சளி மாதிரி கரோனா பரிசோதனைக்காக மத்திய பிரதேச ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் அண்மையில் ஒரு சிங்கம் உயிரிழந்ததோடு, 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி, திருநள்ளாறு கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 17 வயது பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், யானையின் சளி மாதிரி மத்திய பிரதேசத்தில் உள்ள மத்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இப்பணியில் காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் மற்றும் கால்நடை மருத்துவா் எம்.கோபிநாத் ஆகியோா் ஈடுபட்டனா். பரிசோதனை முடிவு ஒருவாரத்தில் வெளியாகும் என லதா மங்கேஷ்கா் தெரிவித்தாா்.