காரைக்கால்

காரைக்காலில் 49 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 795 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 13, திருப்பட்டினம் 7, கோட்டுச்சேரி 7, நிரவி 6, நல்லம்பல் 6, நெடுங்காடு 5, கோயில்பத்து 2, காரைக்கால்மேடு, திருநள்ளாறு, அம்பகரத்தூா் தலா ஒருவா் என மொத்தம் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,51,658 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,233 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 219 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 41,250 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,755 பேருக்கும் என 46,005 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT