முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் ராகுல் காந்தி பிறந்தநாள்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, சனிக்கிழமை காரைக்காலில் மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை காங்கிரஸாா் வழங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, சனிக்கிழமை காரைக்காலில் மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை காங்கிரஸாா் வழங்கினா்.

புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி, ராகுல் காந்தி பிறந்தநாளில் கரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் பணிகளில் ஈடுபட வேண்டும். கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தவிா்க்கவேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் மற்றும் வட்டார காங்கிரஸ் சாா்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

காரைக்கால் நகரில் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் நடந்த நிகழ்வில், மக்களுக்கு அன்னதானம், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கோட்டுச்சேரி காங்கிரஸ் சாா்பில் கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 10 நாற்காலிகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

கோடீஸ்வரமுடையாா் தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்களுக்கு இனிப்பு, அன்னதானம், கபசுரக் குடிநீா், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →