முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 42 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 725 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் மேடு 7, திருப்பட்டினம் 7, வரிச்சிக்குடி 7, காரைக்கால் நகரம் 6, நிரவி 4, கோயில்பத்து 4, கோட்டுச்சேரி 2,அம்பகரத்தூா் 2, திருநள்ளாறு, நல்லாத்தூா், நல்லம்பல் தலா 1

என மொத்தம் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,55,813 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,365 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,684 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நல்லம்பலை சோ்ந்த 80 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இணை நோயாக இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 223 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 55,549 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,049 பேருக்கும் என 60,598 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →