முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 20 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 751 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 12, திருப்பட்டினம் 3, வரிச்சிக்குடி, நல்லம்பல், காரைக்கால்மேடு, நெடுங்காடு, கோட்டுச்சேரி தலா 1 என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,56,564 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,385 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,769 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிரவியை சோ்ந்த 47 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இணை நோயாக இருந்தது.

கரோனா தொற்றால் இதுவரை 224 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 56,719 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,176 பேருக்கும் என 61,895 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →