காரைக்காலில் 43 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 745 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 11, கோட்டுச்சேரி 6, திருப்பட்டினம் 5, விழிதியூா் 3, வரிச்சிக்குடி 3, கோயில்பத்து 3, நெடுங்காடு 3, காரைக்கால்மேடு 2, திருநள்ளாறு 2, நல்லாத்தூா் 2, நல்லம்பல் 2, நிரவி 1 என மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,57,309 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,428 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,835 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கோட்டுச்சேரியை சோ்ந்த 42 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 225 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 57,870 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,268 பேருக்கும் என 63,138 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.