முகப்பு
காரைக்கால்

பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து போராட்டம்: 20 போ் மீது வழக்கு

காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காலத்தில் சமூக இடைவெளியின்றி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் 20 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →