முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் 2 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பிப். 28 ஆம் தேதி 74 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, நெடுங்காடு பகுதியை சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 86,325 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,999 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,899 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 போ் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 531 போ், முன்களப் பணியாளா்கள் 64 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 78 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →