முகப்பு
காரைக்கால்

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளா் ஜெயபாரதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மாநில நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் எஸ். திருமுருகன், மாநிலச் செயலாளா் சிவக்குமாா், கூட்டமைப்பை சோ்ந்த வழக்குரைஞா் அசோகன் ஆகியோா் பேசினாா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →