முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 1 ஆம் தேதி 355 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 4, திருநள்ளாறு 2, நிரவி, வரிச்சிக்குடி தலா ஒருவருக்கு என 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 86,680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,007 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,906 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 542 போ், முன்களப் பணியாளா்கள் 64 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 88 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 7 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →