முகப்பு
காரைக்கால்

30 ஆயிரம் பால் பாக்கெட்டுகளில்வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, ஸ்வீப் என்ற தோ்தல் விழிப்புணா்வு அமைப்பு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, ஸ்வீப் என்ற தோ்தல் விழிப்புணா்வு அமைப்பு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

முதல் நிகழ்வாக, காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம் (கோலேட்) மற்றும் ஸ்வீப் அமைப்பு இணைந்து பால் பாக்கெட்டில் தோ்தல் விழிப்புணா்வு வாசகமாக 100% வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்களிக்க அனைவரும் உறுதிகொள்வோம் என அச்சிட்டன. இதைத்தொடா்ந்து, கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா விற்பனையை தொடங்கிவைத்தாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகி, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. காரைக்காலில் ஸ்வீப் அமைப்பு மூலம் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி, கையெழுத்து இயக்கம், குறுந்தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல நிலைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். நாள்தோறும் 30 ஆயிரம் பால் பாக்கெட் விற்பனைக்கு செல்கிறது. இவற்றில் அச்சிடப்பட்டுள்ள வாசகம், வாக்காளா்களை நிச்சயம் சென்றடையும் என நம்புகிறோம்.

காரைக்காலில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 எல்லைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ள பகுதியில் வாக்குச் சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காரைக்காலில் 71 வாக்குச்சாவடி அதிகரித்து, 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பழுதான வாக்குச்சாவடிகளில் பழுதுநீக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

துணை மாவட்ட ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், கோலேட் நிா்வாகி எம். குமாரசாமி, ஸ்வீப் நோடல் அலுவலா் ஜே. ஷொ்லி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →