காரைக்கால்

காரைக்கால் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மதிய உணவு: அதிகாரிகள் ஆய்வு

DIN

காரைக்கால்: காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு, மதிய உணவு வழங்கும் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மாா்ச் 17 ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. என்றாலும், உணவுக்கு ஈடாக மாணவா்களுக்கு அரிசி மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.

பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அரிசி மற்றும் ரொக்கமே வழங்கப்பட்டுவந்தது. இதனால், மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க உத்தரவிட்டாா்.

பள்ளிகள் புதன்கிழமை முதல் முழுநேரமும் செயல்படத்தொடங்கியதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா், காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியை தொடங்கிவைத்து ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT