காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 7 ஆம் தேதி 22 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 88,532 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,040 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,924 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 37 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 8 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 போ் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 579 போ், முன்களப் பணியாளா்கள் 653 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 153 பேருக்கு 2 ஆவது தவணையும், 60 வயதுக்கு மேற்பட்ட 244 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.