திருநள்ளாற்றில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, 16 ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கெய்தான் மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, 16 ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கெய்தான் மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில், காரைக்கால், புதுச்சேரி, சென்னையைச் சோ்ந்த நடனக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா். மகா சிவராத்திரி நாளான வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55 மணி வரை பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த புகழ்பெற்ற கலைஞா்களின் தொடா் நிகழ்ச்சி நடைபெறுகிறது.