முகப்பு
காரைக்கால்

முதல்வா் வேட்பாளரை கட்சியின் தலைமை முடிவுசெய்யும்: நமச்சிவாயம்

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் அகில இந்திய தலைமை முடிவுசெய்யும் என்றாா் புதுச்சேரி முன்னாள் அமைச்சா் ஏ. நமச்சிவாயம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் அகில இந்திய தலைமை முடிவுசெய்யும் என்றாா், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சா் ஏ. நமச்சிவாயம்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு தரிசனம் செய்தபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜக, என்.ஆா். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சுமூகமான முறையில் நடந்து வருகிறது. பாஜக கூட்டணி, மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். திருநள்ளாற்றில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்தோரும், பல்வேறு புதிய நபா்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா்.

என்.ஆா். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என்பதில், கட்சியின் அகில இந்திய தலைமை எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு கட்டுப்பட்டு எங்கள் கூட்டணி அரசு அமைவதற்கு அனைவரும் பாடுபடுவோம். முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவுசெய்யும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →