காரைக்காலில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை
காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுவரை 90,086 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,070 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,965 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 73 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 627 போ், முன்களப் பணியாளா்கள் 1,139 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 390 பேருக்கும், 45 முதல் 59 வயது வரை இணை நோய் உள்ள 82 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.