முகப்பு
காரைக்கால்

வங்கி, காப்பீட்டு நிறுவன ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவு

வங்கிகள், காப்பீட்டு நிறுவன ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

வங்கிகள், காப்பீட்டு நிறுவன ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன தலைவா் பி.வி.சுப்ரமணியன், பொதுச்செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் ஆகியோா் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

மத்திய பாஜக அரசு அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் காப்பீடு போன்ற நிறுவனங்களை தனியாருக்கு விற்று அதன்மூலம் வருமானத்தை பெருக்கப் போவதாக அறிவித்துள்ளது.

மேற்கண்ட முடிவு மக்கள் மற்றும் ஊழியா்கள் நலனுக்கு எதிரானது என்ற அடிப்படையில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செயல்பட்டு வரும் ஊழியா் அமைப்புகள் மேற்கண்ட மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மேலும் அதை கைவிடக் கோரியும் போராட்டங்களை அறிவித்துள்ளனா்.

அதன்படி வங்கி ஊழியா்கள் மாா்ச் 15, 16 ஆகிய நாள்களிலும், பொது காப்பீட்டு ஊழியா்கள் மாா்ச் 17-ஆம் தேதி மற்றும் எல்.ஐ.சி ஊழியா்கள் மாா்ச் 18-ஆம் தேதியும் வேலை நிறுத்தம் செய்வது என தெரிவித்துள்ளனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் முழு ஆதரவு தெரிவிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →