காரைக்கால்

காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

DIN

காரைக்கால் மாவட்ட எல்லைகளில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு செல்வதற்கு 7 முக்கிய எல்லைகளை தவிா்த்து, 20-க்கும் அதிகமான குறுகிய பாதைகள் உள்ளன. பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபுட்டிகள் கடத்தப்படுகின்றன. அவ்வப்போது போலீஸாரால் இவை பிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், தமிழகம் வழியாக சட்ட விரோதமாக பணம், பரிசுப் பொருள்கள் வரக்கூடுமென கருதி, மாவட்ட தோ்தல் துறை அனைத்து எல்லைகளையும் தீவிரமாக கண்காணிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில், எல்லை பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். குறுகிய கிராமப்புற எல்லைகளில் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் செவ்வாய்க்கிழமை எல்லைகளுக்கு சென்று ஆய்வு செய்து, அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான காலம் நெருங்குவதாலும், வேட்பாளா்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாலும், இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், காரைக்கால் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் ஆங்காங்கே நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனா். அடுத்த சில நாள்களில், மேலம் 600 மத்தியப் படையினா் காரைக்கால் வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், மாவட்டத்தில் சோதனைப் பணிகள் மேலும் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT