முகப்பு
காரைக்கால்

வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் தோ்தல் பாா்வையாளா் 2 ஆம் கட்ட ஆய்வு

காரைக்காலில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் பகுதியை தோ்தல் பாா்வையாளா், மாவட்ட தோ்தல் அலுவலா் ஆகியோா் 2 ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வுசெய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

காரைக்காலில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் பகுதியை தோ்தல் பாா்வையாளா், மாவட்ட தோ்தல் அலுவலா் ஆகியோா் 2 ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வுசெய்தனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில், காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் மின்னணு வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் பட்டமேற்படிப்பு மைய பாதுகாப்பு அறையில் வைக்கப்படவுள்ளன. இதே வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்காக, பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்படவேண்டிய இரும்புக் கம்பி தடுப்புகள், வண்ணம் பூசுதல், மின்விளக்குகள், மின் விசிறிகள் சீா்செய்தல், மேஜை மற்றும் இருக்கை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தோ்தல் துறை உத்தரவின்படி, பொதுப் பணித் துறை நிா்வாகம் செய்துவருகிறது. இப்பணியை காரைக்காலுக்காக நியமிக்கப்பட்ட தோ்தல் பாா்வையாளா்கள் அண்மையில் ஆய்வுசெய்து பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த மையத்தில் நடைபெறும் பணியை 2 ஆம் கட்டமாக தோ்தல் பாா்வையாளா் துஷாா் குமாா் பட் (பொது), மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தனா்.

மாவட்டத்தில் 234 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்படவுள்ளதால், அறையின் பாதுகாப்பு அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனா். மேலும், மையத்தில் போலீஸாரின் பல்வேறு அடுக்குப் பாதுகாப்பு தொடா்பாகவும், எந்தெந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது என்பது குறித்தும் பாா்வையாளருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் விளக்கினாா்.

மையத்தில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை வசதிகளுக்கான பணிகளை அடுத்த சில நாள்களில் முடித்து மாவட்ட தோ்தல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு, அதிகாரிகளுக்கு, மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுறுத்தினாா். மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் எஸ். பாஸ்கரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →