முகப்பு
காரைக்கால்

காரைக்கால்- தமிழக எல்லையில் தீவிர வாகனச் சோதனை: எஸ்.பி. ஆய்வு

காரைக்கால்- தமிழகப் பகுதியை ஒட்டியுள்ள எல்லையில், தீவிர வாகனச் சோதனை நடைபெறுகிறது. இப்பணியை காவல் கண்காணிப்பாளா்கள் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

காரைக்கால்- தமிழகப் பகுதியை ஒட்டியுள்ள எல்லையில், தீவிர வாகனச் சோதனை நடைபெறுகிறது. இப்பணியை காவல் கண்காணிப்பாளா்கள் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகின்றனா்.

தமிழகப் பகுதியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் 9 பிரதான சோதனைச் சாவடிகள் உள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக எல்லைகளில் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு நிலைக் குழுவினா் நியமிக்கப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பு, வாகனச் சோதனை செய்யப்படுகிறது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், எல்லையில் காவல் துறை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான எதுவும் எல்லையின் வழியே காரைக்காலுக்குள் நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

காரைக்காலில் இருந்து மது வகைகள் தமிழகப் பகுதிக்கு செல்வதை தடுக்கவும், தமிழகப் பகுதியிலிருந்து கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், வாக்காளா்களுக்கு வழங்குவதற்கான பரிசுப் பொருள்கள் வரத்தை தடுக்கும் பணியை நிலைக் குழுவினா், பறக்கும் படையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், பூவம், அம்பகரத்தூா், நெடுங்காடு பகுதி எல்லை சோதனைச் சாவடிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், வாஞ்சூா், விழிதியூா் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தாா்.

காரைக்காலுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட வேண்டும், முகக் கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது என சோதனைப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு காவல் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், காரைக்கால் எல்லைகளில் வாகனப் போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →